ஓடும் பஸ்சில் பெண்ணிடம் திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் திருட்டு
x

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் திருட்டு

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சுதா(வயது 23). இவர் நேற்று அருப்புக்கோட்டை பஜார் பகுதிக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் அரசு பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சொக்கலிங்கம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சில் இருந்து திடீரென ஒரு பெண் சுதாவை இடித்து தள்ளிவிட்டு வேகமாக கீழே இறங்கினார். இதனால் சந்தேகம் அடைந்த சுதா கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது அதிலிருந்த பர்ஸ் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தன்னை இடித்து கொண்டு பஸ்சை விட்டு இறங்கிய பெண் தான் பர்சை திருடி இருக்க வேண்டும் என கருதினார். இதையடுத்து உடனடியாக பஸ்சிலிருந்து இறங்கி அந்தப் பெண்ணை விரட்டிச் சென்றுள்ளார். தன்னை விரட்டுவதை அறிந்த அந்த பெண் எடுத்துச் சென்ற பர்சை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் சுதா அவரை பொதுமக்கள் உதவியுடன் விரட்டிப் பிடித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில் பர்சை திருடி சென்ற பெண் திருச்சியைச் சேர்ந்த ராஜி(50) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பர்சை திருடி சென்ற பெண்ணை கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story