டாலர் பரிமாற்றம் செய்வதாக நடித்து தபால் அலுவலகத்தில் பணம் திருட்டு


டாலர் பரிமாற்றம் செய்வதாக நடித்து தபால் அலுவலகத்தில் பணம் திருட்டு
x

டாலர் பரிமாற்றம் செய்வதாக நடித்து தபால் அலுவலகத்தில் பணம் திருட்டு

மதுரை

பேரையூர்

டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் உள்ள தபால் அலுவலகத்தில் அஞ்சல் அதிகாரியாக பணிபுரிபவர் சரண்யா(வயது 34). இவர் நேற்று தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, வெளிநாட்டவர்கள் போல் தோற்றம் கொண்ட ஆண் மற்றும் பெண் அங்கு வந்தனர். அவர்கள் ஆங்கிலத்தில், டாலரை இந்திய ரூபாயாக பரிமாற்றம் செய்துதரமுடியுமா என்று கேட்டனர். அதற்கு சரண்யா அந்த வசதி இங்கு இல்லை, மதுரையில் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். பின்னர் அந்த ஆண் நபர் வெளியே சென்று விட்டார். பெண் மட்டும் அலுவலகத்தில் இருந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் இருவரும் தாங்கள் வந்த காரில் ஏறி சென்று விட்டனர். பின்னர் அஞ்சல் அதிகாரி சரண்யா சந்தேகப்பட்டு அங்கிருந்த பணத்தை சரிபார்த்த போது அதில் ரூ.24 ஆயிரத்து 800-ஐ காணவில்லை. இதையடுத்து தபால் அலுவலகத்தின் உள்ளே வந்த 2 பேர் தான் பணத்தை திருடி இருக்கலாம் என டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story