ஸ்டூடியோவில் பணம் திருட்டு


ஸ்டூடியோவில் பணம் திருட்டு
x

ஸ்டூடியோவில் பணம் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 55). இவர் ஏர்வாடி மெயின் ரோட்டில் ஸ்டூடியோ வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் தனது மணி பர்ஸ்சை மேஜையில் வைத்து விட்டு சென்றார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் மணி பர்சில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, சிறுவர்கள் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story