அனைத்து குரும்பர்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்


அனைத்து குரும்பர்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
x

அனைத்து குரும்பர்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் குரும்பர், குரும்பர்கள், குரும்பன், குரும்பா, குருமன் ஆகிய சாதிப்பிரிவினர் அனைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களின் வாழ்க்கை முறை, சமூக நிலை ஆகியவை ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் வாழும் குரும்பாக்களும், தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழும் குருமன்களும் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். குரும்பர், குரும்பக்கவுண்டர் ஆகிய சாதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது அநீதியானது.

ஒரே மாதிரியான வாழ்க்கை முறையும், சமூக நிலையும் கொண்ட அனைத்து வகை குரும்பர்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசு வலிமையான காரணங்களுடன் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பினால், அதை மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்திய தலைமை பதிவாளர் அலுவலகம், தேசிய பழங்குடியினர் ஆணையம் ஆகியவை அப்படியே ஏற்றுக்கொள்ளும் என தெரிகிறது. அதனால் அனைத்து குரும்பர்களும் பழங்குடி இனத்தில் சேர்க்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story