பழைய ஓட்டுப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் கருவிகளை பெங்களூருவுக்கு அனுப்ப நடவடிக்கை


பழைய ஓட்டுப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் கருவிகளை பெங்களூருவுக்கு அனுப்ப நடவடிக்கை
x

தூத்துக்குடியில் இருந்து பழைய ஓட்டுப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் கருவிகளை பெங்களூருவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள பழைய ஓட்டுப்பதிவுக்கான ஒப்புகை சீட்டு காண்பிக்கும் கருவிகளை பெல் நிறுவனத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓட்டுப்பதிவு எந்திரம்

பெங்களூரில் உள்ள பெல் நிறுவனம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் கருவிகள் (விவிபேட்) புதிதாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் ஆரம்பகாலத்தில் தயாரிக்கப்பட்ட விவிபேட் கருவிகள் மற்றும் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விவிபேட்

அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்ட 797 விவிபேட் கருவிகளும், பழுதடைந்த 100 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும் உள்ளன. இந்த எந்திரங்களை பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா தலைமையில் தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பழைய எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தனியாக பிரித்து வைக்கப்பட்டன. இந்த எந்திரங்கள் விரைவில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.


Next Story