155 மாடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை
155 மாடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருச்சி
திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருவளர்ச்சிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன படுத்தும் திட்டம் பகுதி-1-ன் கீழ் 4-ம் ஆண்டாக பொன்னணியாறு உபவடி நிலப்பகுதியில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்.எஸ்தர்ஷீலா முகாமுக்கு தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் மருதைராஜூ முன்னிலை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு 62 விவசாயிகள் அழைத்துவந்திருந்த 155 மாடுகளுக்கு மலடுநீக்க சிகிச்சை அளித்தனர். 35 கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story