கருத்தடை செய்த பெண் சாவு
குன்னூர் தனியார் மருத்துவமனையில் கருத்தடை செய்த பெண் இறந்தார்.
நீலகிரி
குன்னூர்,
குன்னூர் அருகே பெட்டட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெய்குமார். இவரது மனைவி அனுசியா. இவருக்கு கடந்த 10-ந் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து அனுசியாவுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. சிகிச்சை முடிந்தும் தொடர்ந்து அனுசியா மயக்க நிலையில் இருந்ததார். இதனால் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அனுசியா இறந்தார். தொடர்ந்து ஜெய்குமாரின் சகோதரி சரோஜா குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story