ரெயில்வே தொழிற்சங்கத்தினரின் போட்டி ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு


ரெயில்வே தொழிற்சங்கத்தினரின் போட்டி ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு
x

அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும், நெல்லையில் ரெயில்வே தொழிற்சங்கத்தினரின் போட்டி ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி

அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும், நெல்லையில் ரெயில்வே தொழிற்சங்கத்தினரின் போட்டி ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு நிலவியது.

ஆர்ப்பாட்டம்

ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்ற ஆள் சேர்க்கும் அக்்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய பழைய கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசன், சிவபெருமாள், இன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவு தகர்ந்து போய் விட்டது. எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

போட்டி ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய புதிய கட்டிடம் அருகில் பிட் லைனில் தட்சிண ரெயில்வே கார்மிக் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில்வே துறையின் விதிக்கு எதிராக இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்தும் அக்னிபத் திட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்தும், தற்போது ராணுவத்தில் ஆள் சேர்ப்பது போன்று ரெயில்வேயிலும் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்க உள்ளதாக பொய்யான பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

தென் மண்டல துணை பொதுச்செயலாளர் மணி, கோட்ட கூடுதல் செயலாளர் அருண்குமார், கிளை பொறுப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சங்கத்தினர் போட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story