விநாயகர் சிலை கண் திறந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு


விநாயகர் சிலை கண் திறந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு
x

கோத்தகிரி அருகே விநாயகர் சிலை கண் திறந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி சுங்கம் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், சுவாமிக்கு தீபாராதனை நடந்த போது, விநாயகர் சிலையின் கண் திறந்து மூடியதாக கூறப்படுகிறது. சில நொடிகள் விநாயகர் சிலை கண் திறந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த சுங்கம் கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா வட்டார மக்களும் விநாயகர் சிலை கண் திறந்த காட்சியை காண கோவிலுக்கு அதிகம் பேர் வந்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story