வீடு புகுந்து கத்திமுனையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு


வீடு புகுந்து கத்திமுனையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு
x

மேச்சேரி அருகே வீடு புகுந்து கத்திமுனையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் 7 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

மேச்சேரி:

முன்னாள் தலைவி

மேச்சேரி அருகே உள்ள குட்டப்பட்டி புதூர் 4 ரோடு பகுதியை சேர்ந்தவர் ருக்மணி (வயது 80). இவர் எம்.காளிப்பட்டி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி ஆவர். இவர் கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் 2 பேர் புகுந்தனர். அவர்கள் ருக்மணியின் வாயை பொத்தி, கத்திமுனையில் கழுத்து, காதில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 7 பவுன் நகைகளை பறித்து விட்டு, தப்பிச்சென்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு

பின்னர் இது குறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தொடர்ந்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் கத்திமுனையில் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story