21 மோட்டார் சைக்கிள்கள் திருடி விற்பனை; 2 பேர் கைது


21 மோட்டார் சைக்கிள்கள் திருடி விற்பனை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2023 12:30 AM IST (Updated: 26 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே 21 மோட்டார் சைக்கிள்களை திருடிய விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே 21 மோட்டார் சைக்கிள்களை திருடிய விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிராஜன், ராமகிருஷ்ணன், பிரேம்குமார், குணசேகரன் மற்றும் போலீசார் கருங்குளம் அருகே உள்ள தாதன்குளம் ெரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

2 பேர் கைது

அப்போது 2 பேர் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்கள் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் வெள்ளூர் கீழத்தெருவைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் ராமசுப்பு (வயது 34), இலுப்பைகுளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை கண்ணு மகன் ஆறுமுகம் (44) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 21 இருசக்கர வாகனங்களை திருடி விற்றது தெரியவந்தது. இதில் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள 13 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனா். தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story