தூத்துக்குடியில் திருடப்பட்ட டேங்கர் லாரி மீட்பு


தூத்துக்குடியில் திருடப்பட்ட டேங்கர் லாரி மீட்பு
x

தூத்துக்குடியில் திருடப்பட்ட டேங்கர் லாரியை போலீசார் மீட்டனர்.

தூத்துக்குடி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மோகனரெங்கன் மகன் அய்யனார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான டேங்கர் டிரைலர் லாரி கடந்த 28-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றுவதற்காக சென்றது. இந்த நிலையில் அந்த லாரியை மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அய்யனாருடைய லாரி டிரான்ஸ்போர்டு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த குருசாமி மகன் கார்த்திக் (வயது 32) அந்த டிரைலர் லாரியை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து தனிப்படையினர் முத்தையாபுரம் பகுதியில் டேங்கர் இல்லாமல் லாரி மட்டும் நிற்பதை கண்டறிந்து மீட்டனர். தலைமறைவாக உள்ள கார்த்திக்கை போலீசார் தேடிவருகின்றனர். இவர் மீது தூத்துக்குடி மத்தியபாகம், தென்பாகம் மற்றும் சிப்காட் போலீஸ் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story