பென்னாகரம் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு


பென்னாகரம் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

பென்னாகரம் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

நடுகல்

பென்னாகரம் தாலுகா கருபையனஅள்ளி கிராமத்தில் பழங்கால நடு கற்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் அந்த பகுதியில் கள ஆய்வு நடத்தினர். அப்போது 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு நடுகல் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் தனது வலது கையில் பெரிய வாளை தலைக்கு மேலே ஓங்கி பிடித்தவாறும், இடது கையில் குதிரையை பிடித்துள்ளவாறும் காட்சி படுத்தப்பட்டுள்ளது. கைப்பகுதியில் அரசருக்குரிய பட்டைகளும், வீரப்பட்டையும், கால்களுக்கு அருகில் கம்பம் ஒன்றும், கம்பத்தின் மேல் ஒரு சக்கரம் போன்ற அமைப்பும் காணப்படுகின்றது. கம்பத்தில் ஒரு மனித உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

நாயக்க மன்னர்கள்

இந்த நடுகல் அருகே சிதைந்த நிலையில் ஒரு சிறு நடுகல்லும் காணப்படுகின்றது. இந்த நடுகற்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தை சேர்ந்தது என்று முதல் கட்ட கள ஆய்வில் தெரியவந்தது. இதுபற்றி ஆய்வு நடத்திய குழுவினர் கூறுகையில், இந்த பகுதியில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. இது குறித்து விரிவாக கள ஆய்வு நடத்தப்படும் என்றனர்.


Next Story