ரேஷன் கடைக்கு செல்லும் பாதை சீரமைப்பு
ரேஷன் கடைக்கு செல்லும் பாதை சீரமைப்பு
திருப்பூர்
அருள்புரம்
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் ரேஷன் கடைக்கு செல்லும் வழியில் ஜல்லிகற்கள், மணல் ஆகியவற்றை கொட்டி இருப்பதால் ரேஷன் கடைக்கு பொருட்களை லாரியில் பொருட்களை இறக்க முடியாது சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக ஜல்லிகற்கள், மணல் ஆகியவற்றை உடனடியாக அகற்றி ரேஷன் கடைக்கு லாரியில் பொருட்களை இறக்க வழி ஏற்படுத்தப்பட்டது. செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வைத்த 'தினத்தந்தி' நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் அந்த ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்கும் பொதுமக்கள் நன்றிதெரிவித்தனர்.
----------
Related Tags :
Next Story