விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கல்வீச்சு; 20 பேர் காயம்


விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கல்வீச்சு; 20 பேர் காயம்
x

சிறுகனூர் அருகே விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கல்வீசியதால் 20 பேர் காயம் அடைந்தனர். அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருச்சி

சமயபுரம்,செப்.4-

சிறுகனூர் அருகே விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கல்வீசியதால் 20 பேர் காயம் அடைந்தனர். அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள குமுளூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 3 இடங்களில் ஒரு பிரிவினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். நேற்று முன்தினம் அந்த சிலைகளை கரைப்பதற்காக உடையார் தெரு வழியாக புஞ்சை சங்கேந்தி பகுதியில் உள்ள நீர் நிலைக்கு மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்தநிலையில் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை உடையார்தெரு வழியாக எடுத்து செல்லக்கூடாது என்று ெதரிவித்தனர். இதனால் இருபிரிவினர் இடையே வாக்குவாதமாகி மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் கற்களை வீசினர். இதனால் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

20 பேர் காயம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதில் கல்வீசியதில் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து காயம் அடைந்தவர்கள் லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story