பந்தலூரில் திறக்கப்பட்ட கடை மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு
பந்தலூரில் திறக்கப்பட்ட கடை மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்
பந்தலூரில் திறக்கப்பட்ட கடை மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையடைப்பு போராட்டம்
பந்தலூர் அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் ஆ.ராசா எம்.பி. கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். அதன்படி நேற்று பந்தலூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
ஆனால் ஒருசில கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதுபற்றி அறிந்ததும் இந்து அமைப்பினர் அங்கு சென்று, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
கல்வீச்சு -பரபரப்பு
அப்போது அங்கு இருந்து சிலர் திறக்கப்பட்டு இருந்த ஒரு கடைமீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் நடேஷன், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் அங்கு சென்று, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கடையின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.