புதிய கல்குவாரி அமைக்கு பணியை நிறுத்த வேண்டும்; பொதுமக்கள் மனு
எடப்பாளையத்தில் புதிய கல்குவாரி அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் செப்டாங்குளம் ஊராட்சியில் உள்ள எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செப்டாங்குளம் ஊராட்சியில் உள்ள எடப்பாளையம் பகுதியில் புதிய கல்குவாரி அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஊராட்சியில் ஏற்கனவே 2 கல்குவாரிகள் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த கல்குவாரிகளால் எங்கள் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இது எங்கள் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கல்குவாரி அமைக்கும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story