குடிநீர் வினியோகம் நிறுத்தம்


குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமயிலாடி கிராமத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் பொதுமக்கள் அவதி அடைந்தனர்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் திருமயிலாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மின்மோட்டார் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூலம் திருமயிலாடி கிராமத்தில் 14,15-வது வார்டு பகுதியில் உள்ள தெருவிற்கு குடிதண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 1 ஆண்டு காலமாக இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

திருமயிலாடி கிராமத்தில் உள்ள 14,15-வது வார்டு பகுதியில் உள்ள தெரு பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. ஆனாலும் கடந்த 1 ஆண்டு காலமாக குடி தண்ணீர் வராததால் எங்கள் பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடிபம்பு மூலம் தண்ணீர் பிடித்து எங்கள் அத்தியாவசிய தேவைகளை சரி செய்து வருகிறோம். தற்போது நிலத்தடி நீர் மண் அதிகமாக கலந்து காவிநிறத்தில் வருகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் எங்கள் பகுதியை ஆய்வு செய்து எங்கள் தெருவிற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story