சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்


சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
x

நாட்டறம்பள்ளி அருகே சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞருக்கும், ஆத்தூர்குப்பம் ஜங்காலபுரம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவருடைய தலைமையில், துணை தாசில்தார் ராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் காவல் துறையினர் வாலிபரின் வீட்டிற்கு சென்று பெற்றோரை அழைத்து சிறுமிக்கு திருமணம் செய்தால் பெற்றோர் மீதும் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் மீதும் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோன்று சிறுமியின் வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற போது வீட்டில் யாரும் இல்லை. இதனால் வருவாய் துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்து விட்டு சென்றனர்.


Next Story