வங்க கடலில் 'சிட்ரங்' புயல் உருவாகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்


வங்க கடலில் சிட்ரங் புயல் உருவாகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 19 Oct 2022 10:15 AM IST (Updated: 19 Oct 2022 10:21 AM IST)
t-max-icont-min-icon

சிட்ரங் புயல் வங்க கடலில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமணடல் மேலடுக்கு சுழற்சி கடந்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.22 ஆம் தேதி க்கு பிறகு சிட்ரங் புயல் வங்க கடலில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story