எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் கூட்டம்
களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
களக்காடு:
களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைமையகத்தில் நிர்வாகிகள் கூட்டம், புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே.பீர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் முல்லை மஜித், அமைப்பு பொதுச்செயலாளர் எம்.எஸ்.சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனார். மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கட்சியின் 15-ம் ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், ரத்ததான முகாம் நடத்துவது. நெல்லை மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கும் தனியார் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். களக்காடு வனத்துறை மூலமாக அடைத்து வைக்கப்பட்ட சிவபுரம் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் பாதையை மீட்டெடுக்க சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் சுலைமான் நன்றி கூறினார்.