எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்குழு கூட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்குழு கூட்டம்
x

மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்குழு கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கி பேசினார். மண்டல தலைவர் ஜூல்பிகர்அலி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், நெல்லை மாநகர பகுதியில் நடைபெறுகிற ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மாநகர பகுதியில் பெருகி வரும் நாய்கள் மற்றும் பன்றிகளை மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும். மேலப்பாளையம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் அன்வர்ஷா நன்றி கூறினார்.


Next Story