எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்குழு கூட்டம்
சேரன்மாதேவியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்குழு கூட்டம் நடந்தது
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முல்லை மஜித் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ் தொடக்க உரையாற்றினார். கடந்த ஆண்டுக்கான பணிகள் குறித்த ஆண்டறிக்கையை மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா சமர்பித்தார். மாவட்ட பொருளாளர் இளையராஜா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலில் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், திருச்செந்தூர் முதல் பாபநாசம் வரை சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். தாமிரபரணி ஆறு மற்றும் கால்வாய்களில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலக்கின்றது. இதனால் குடிநீர் சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதால் இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் முகம்மது ஷபி நன்றி கூறினார்.