எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்
x

காயல்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் காதர் முகைதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் ஜூல்பிகர் கலந்து கொண்டார். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவராக காயல்பட்டினம் முகமது உமர், செயற்குழு உறுப்பினராக அம்ஜத் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர் உஸ்மான், மாவட்ட பொருளாளர் அசரப் அலி, மாவட்ட மீனவர் அணி தலைவர் கவுது முகைதீன், டிரேடு யூனியன் மாவட்ட தலைவர் குலசை தாஹிர், முன்னாள் தலைவர் சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக்முகைதீன் நன்றி கூறினார்.


Next Story