எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அம்பையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்பை:
மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் அம்பையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ் வரவேற்றார். துணை தலைவர் முல்லை மஜித், செயலாளர் சுலைமான், பொருளாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேளாண் அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா, அம்பை வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் ஷேக் மீரான் மிஸ்பாஹி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கரிசல் சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விமன் இந்தியா மூவ்மெண்டின் நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஜலில் நன்றி கூறினார்.