எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம்
x

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கீரனூர் நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான வெறிநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும், பள்ளிக்கு செல்லும் சிறுவர்களையும் விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்தவும், கருத்தடை ஊசி போட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்ைககளை வலியுறுத்தி கீரனூர் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் தீன் பாட்சா மற்றும் நகர செயலாளர்கள் சேக் அலாவுதீன், ரோஜா குமார் மற்றும் நிர்வாகிகள் நாய் பட முககவசம் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக வந்து பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story