கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய40 கிலோ கஞ்சா பொட்டலங்கள்


கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய40 கிலோ கஞ்சா பொட்டலங்கள்
x

கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள்

நாகப்பட்டினம்

கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா பொட்டலங்களை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரை ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சோழர்கால கலங்கரை விளக்கம் உள்ளது. இதன் அருகே 20 பொட்டலங்களில் 40 கிலோ கஞ்சா சுமார் 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்கரையில் ஒதுங்கி கிடந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த கோடியக்கரை சுங்கத்துறை ஆய்வாளர் இம்ரான்கான் தலைமையில் சுங்கத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

இலங்கைக்கு கடத்தலா?

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்லும்போது தவறி விழுந்த கஞ்சா பொட்டலங்களாக இருக்கலாம் எனவும், இந்த கஞ்சா பொட்டலங்கள் கடலில் சுமார் 1 மாதத்திற்கு முன்பு விழுந்து தற்போது கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story