சாலையில் திரிந்த மாடுகள்; உரிமையாளர்களுக்கு அபராதம்


சாலையில் திரிந்த மாடுகள்; உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 8 July 2023 1:00 AM IST (Updated: 8 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

சாலையில் திரியும் மாடுகள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதேபோல் சாலையில் குறுக்காக செல்லும் மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தை சந்திக்க நேரிடுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.

இதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்படி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி, கால்நடை பராமரிப்பு, போலீஸ் உள்பட 5 துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் மாடுகளை ஏற்றுவதற்கு வசதியாக மினி லாரியில் சாய்வு தளம் பொறுத்தப்பட்டது.

உரிமையாளர்களுக்கு அபராதம்

இதைத் தொடர்ந்து நேற்று தனிப்படை அதிகாரிகள் திண்டுக்கல்லில் நேற்று சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் இறங்கினர். திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலை, மேட்டுப்பட்டி, ஆர்.எம்.காலனி, கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 7 மாடுகளை அதிகாரிகள் பிடித்து மினி லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

பின்னர் மாடுகளின் உரிமையாளர்களை வரவழைத்து அபராதம் விதித்தனர். மேலும் மாடுகளை சாலையில் திரியவிடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர். இதேபோல் தொடர்ச்சியாக மாநகராட்சி முழுவதும் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடைபெறும் என்றும், அபராதம் செலுத்த தவறினால் கோசாலையில் மாடுகள் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.


Related Tags :
Next Story