குரைக்கும் மானை தாக்கிய தெரு நாய்கள்


குரைக்கும் மானை தாக்கிய தெரு நாய்கள்
x
தினத்தந்தி 23 May 2023 5:45 AM IST (Updated: 23 May 2023 5:46 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் குடியிருப்புக்குள் நுழைந்த குரைக்கும் மானை கடித்த தெரு நாய்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அக்ரகாரம் தெரு பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று மாலை அரிய வகை குரைக்கும் மான் ஒன்றை தெருநாய்கள் விரட்டி வந்தது. தொடர்ந்து மானை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியது. இதை பர்த்த அப்பகுதி மக்கள் தெரு நாய்களை விரட்டினர். பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் காயங்களுடன் கிடந்த அரிய வகை குரைக்கும் மானை மீட்டனர். பின்னர் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மானின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு வனப்பகுதியில் மீண்டும் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story