ஊட்டியில் புள்ளி மானை கடித்துக்கொன்ற தெருநாய்கள்
ஊட்டி நகருக்குள் புகுந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடிதத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
ஊட்டி
ஊட்டி நகருக்குள் புகுந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடிதத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
ஊட்டிக்குள் புகுந்த புள்ளிமான்
நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் காட்டு யானைகள், கரடிகள், மான்கள், சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது.வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊட்டி அருகே வனப்பகுதியில் இருந்த புள்ளிமான் ஒன்று வழி தவறி ஊட்டி நகர் பகுதிக்குள் புகுந்தது.
தெரு நாய்கள் கடித்தன
இதையடுத்து பொதுமக்கள் நடமாட்டம் இருந்தால், மிரண்டு போன மான் அங்கும் இங்கும் ஓடியது. இதையடுத்து மானின் நடமாட்டத்தை கண்ட தெரு நாய்கள் மனை விரட்டி சென்று கடித்து குதறின. இதில் மான் படுகாயம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து குடியிருப்புவாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானை மீட்டடனர். ஆனால் சற்று நேரத்தில் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து ஊட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மானின் உடல் வன விலங்குகளின் இரைக்காக வனப்பகுதியில் வீசப்பட்டது. இதற்கிடையே புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டி சென்று வேட்டையாடிய சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இவற்றைக் கொண்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.