கடமானை கடித்து குதறிய தெருநாய்கள்


தினத்தந்தி 10 Sept 2023 5:30 AM IST (Updated: 10 Sept 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் வனப்பகுதியில் தெரு நாய்கள் கடித்து குதறிய கடமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து நகருக்குள் கடமான் ஒன்று நேற்று புகுந்தது. கொடைக்கானல் செண்பகனூர்-பிரகாசபுரம் பிரதான சாலையில் சுற்றித்திரிந்த அந்த கடமானை தெருநாய்கள் விரட்டின. உயிர் பிழைப்பதற்காக அங்கும் இங்குமாக கடமான் ஓடியது. இருப்பினும் தொடர்ந்து விரட்டி சென்ற தெருநாய்கள், கடமானை கடித்து குதறின. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தெருநாய்களை விரட்டினர். இதற்கிடையே அங்குள்ள தனியார் தோட்டத்தில் கடமான் தஞ்சம் அடைந்தது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னா் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த கடமானை மீட்டனர். அதன்பிறகு கால்நடை மருத்துவமனையில் கடமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கடமானை வனத்துறையினர் விட்டனர். கடமானை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவத்தால் கொடைக்கானலில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தெருநாய்களிடம் சிக்கி கடிபட்ட கடமான், கடந்த மாதம் கொடைக்கானல் வனத்துறை அலுவலகம், செண்பகனூர் பகுதிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story