உடல்களை தெருநாய்கள் தோண்டி எடுக்கும் அவலம்


உடல்களை தெருநாய்கள் தோண்டி எடுக்கும் அவலம்
x

கோத்தகிரி அருகே மயானத்தில் உடல்களை தெருநாய்கள் தோண்டி எடுக்கும் அவலம் நடந்து வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அரவேனு பகுதியில் பொது மயானம் உள்ளது. இந்த மயானத்தை அரவேனு மற்றும் காமராஜர் நகர், தவிட்டுமேடு, கீழ்கைத்தளா, புதூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மயானத்தில் போதுமான இட வசதி இல்லை. இதனால் ஏற்கனவே அடக்கம் செய்த உடல்களின் மேல் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இங்கு அடக்கம் செய்யப்பட்ட உடல்களை தெரு நாய்கள் தோண்டி வெளியே எடுத்து கடித்து குதறி விட்டு செல்கின்றன. இதன் காரணமாக உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மயானம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து தெரு நாய்கள், காட்டுப்பன்றிகளின் இருப்பிடமாக மாறி உள்ளது. எனவே, பொது மயானத்தை பராமரிப்பு செய்து, பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story