தாண்டிக்குடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்


தாண்டிக்குடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்
x
தினத்தந்தி 5 July 2023 2:30 AM IST (Updated: 5 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தாண்டிக்குடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான தாண்டிக்குடி, பெரும்பாறை, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி. கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் போன்ற பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள், சாலையில் நடந்து செல்பவர்களையும், சிறுவர்களையும் துரத்தி அச்சுறுத்தி வருகின்றன.

மேலும் நாய்கள் கடித்து குதறுவதால் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பதற்றமடையும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.சிப்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தும் மற்றும் தெருக்களில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிந்தன. அப்போது சாலையில் நடந்து சென்றவர்களை அந்த நாய்கள் துரத்தியதால், அவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story