ஓலைப்பட்டினம் வாய்க்கால் ரூ.13¾ கோடியில் சீரமைப்பு
கும்பகோணத்தில் ஓலைப்பட்டினம் வாய்க்காலில் ரூ.13¾ கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் ஓலைப்பட்டினம் வாய்க்காலில் ரூ.13¾ கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓலைப்பட்டினம் வாய்க்கால்
கும்பகோணம் நகரில் செல்லும் வாய்க்கால்களில் முக்கியமானது ஓலைப்பட்டினம் வாய்க்கால். இந்த வாய்க்கால்கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையம் அருகே உள்ள குளத்தில் தொடங்கி கும்பகோணம் நகரின் பல்வேறு தெருக்கள் வழியாக சென்று உள்ளூர் பகுதியில் மற்ற வாய்க்கால்களுடன் ஒன்றாக கலக்கிறது.இந்த வாய்க்கால் மூலம் நகரில் 25-க்கும் மேற்பட்ட தெருக்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு
தற்போது இந்த வாய்க்காலின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் வாய்க்காலின் தடம் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து மழைக்காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல உரிய நீர்வழி பாதை இல்லாமல் நகரில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம் உள்ளது. ஓலைப்பட்டினம் வாய்க்காலை முறையாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
தூா்வார முடிவு
இந்தநிலையில் ஓலைப்பட்டினம் வாய்க்காலை உள்கட்டமைப்பு மற்றும் சிறப்பு நிதி மூலம் ரூ.13.98 கோடி மதிப்பில் தூர்வாரி சீரமைக்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தப்பள்ளி கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- , ஓலைபட்டினம் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமப்புகளை உடனடியாக அகற்றிக் கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் தொடங்கி ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.