திராவிட கழகத்தினர் தெருமுனை பிரசாரம்


திராவிட கழகத்தினர் தெருமுனை பிரசாரம்
x

நிலக்கோட்டையில், திராவிட கழகம் சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.

திண்டுக்கல்

திராவிட கழகம் சார்பில் நடைபெற உள்ள இளைஞரணி மாநில மாநாடு குறித்த தெருமுனை பிரசாரம், நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சக்தி சரவணன் தலைமை தாங்கினார். தி.க. மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வக்கீல் ஆனந்தமுனிராஜன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.க. நகர செயலாளர் பாபு வரவேற்றார்.

இந்த பிரசார கூட்டத்தில், வருகிற 30-ந்தேதி அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறுவது குறித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தி.மு.க. நகர செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story