பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
திருப்பத்தூர் நகர பா.ஜ.க. சார்பில் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகர பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.பிரசார பிரிவு மாவட்ட தலைவர் டி.சி.அருள்மொழி தலைமை தாங்கினார். நகர தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் வி.அன்பழகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் கோ. வெங்கடேசன், மாவட்ட தலைவர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் கவியரசு, இரா.கண்ணன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஜி.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், ராஜேஷ், நகர பொது செயலாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலாஜி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story