கோழிகளை வேட்டையாடிய தெருநாய்கள்
கோழிகளை வேட்டையாடிய தெருநாய்கள்
திருப்பூர்,
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலிபாளையம் மானூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் இடம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்களை பிடிக்க அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்களை துரத்தி கடிக்கின்றன. ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகிறது. தெருக்களில் சிறுவர்கள் நடமாட முடியவில்லை. பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்தில் சென்று வருகிறார்கள்.
தெருநாய் கடித்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முருகேசன் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட 20 கோழிகளை தெருநாய்கள் வேட்டையாடி கொன்றுவிட்டன. 4 ஆடுகளை கடித்துள்ளன. தெருநாய் தொந்தரவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.