வைத்தியநாதசாமி கோவில் பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் வீதி உலா


வைத்தியநாதசாமி கோவில் பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் வீதி உலா
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி பிரம்மோற்சவ விழாவையொட்டி வைத்தியநாதசாமி கோவில் பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

மயிலாடுதுறை

சீர்காழி:

பங்குனி பிரம்மோற்சவ விழாவையொட்டி வைத்தியநாதசாமி ேகாவில் பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் வீதி உலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழா

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட தையல்நாயகி சமேத வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் தலமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாகவும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சுவாமிகள் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.

பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சகோபுர வீதி உலா

விழாவின் 5-ம் நாளாக நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதி உலா நடந்தது. முன்னதாக கார்த்திகை மண்டபத்தில் இருந்து பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருள செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சகோபுர வீதி உலா தொடங்கியது.

இதில் திருநாவுக்கரசு தம்பிரான் கட்டளை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர். இந்த சகோபுரம் நான்கு வீதிகளையும் சுற்றி வரும்போது முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சகோபுரம் மட்டுமே மின்னொளியில் ஜொலித்தது.


Next Story