வாங்காத பொருள்களுக்கு பில் போடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை
ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்காத பொருள்களுக்கு பில் போட்டால் ரேஷன் கடைஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்காத பொருள்களுக்கு பில் போட்டால் ரேஷன் கடைஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரித்துள்ளார்.
முறைகேடு
மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ஏழை குடும்பத்தினர் பயன் அடைந்து வருகின்றனர்.
சில ரேஷன் கடைகளில் ஊழியர்கள் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்காத பொருள்களுக்கும் பில் போட்டு அவர்களது செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.
எச்சரிக்கை
மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்காத பொருள்களுக்கு பில் போட்டு ரேஷன் கார்டு தாரர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.