முத்துநகர் கடற்கரையில் அனுமதியின்றி கூடுவோர் மீது கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை. அனுமதியின்றி கூடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை. அனுமதியின்றி கூடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.
நினைவு அஞ்சலி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் கூடுகின்ற முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி கோரி வழக்கறிஞர் ஹரிராகவன் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு மனு அனுப்பியிருந்தார்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு, முறைப்படி அவருக்கு மறுப்பு அறிவிப்பு செய்யப்பட்டது. அதை அவரும் ஏற்றுக்கொண்டு உள்ளார்.
நடவடிக்கை
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மீண்டும், மீண்டும் முத்துநகர் கடற்கரையில் மேற்படி நிகழ்ச்சி நடக்க இருப்பதாக மக்களிடம் போலியான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வதந்ததியை பரப்புபவர்கள் மீதும், அனுமதி மறுக்கப்பட்டதை மீறி முத்துநகர் கடற்கரையில் கூடுவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே நேரம் நிர்வாகத்துறை மற்றும் காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்துகின்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.