"போதை ஊசி, மாத்திரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை" - அமைச்சர் முத்துசாமி பேட்டி


போதை ஊசி, மாத்திரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி பேட்டி
x

போதை ஊசி, மாத்திரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஈரோட்டில் போதை மாத்திரை பயன்படுத்தி விற்றதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதை ஊசி, மாத்திரை பயன்படுத்துவது, கள்ளச்சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சரும், டி.ஜி.பி.யும் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர். போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் யாருக்கும் துணையாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story