கெட்டுப்போன உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை - உணவு கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை
கெட்டுப்போன உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரித்துள்ளார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 16-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அதிகாரி சுரேஷ், உணவகங்களில் கெட்டுப்போன உணவுகள் வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பார்சல்கள் கொடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story