பஞ்சாயத்து தலைவர்கள் தேசிய கொடியேற்றுவதை யாரேனும் தடுத்தால் கடும் நடவடிக்கை
பஞ்சாயத்து தலைவர்கள் தேசிய கொடியேற்றுவதை யாரேனும் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அனைத்து அலுவலகங்களிலும், ஊராட்சி அலுவலகங்களிலும் தேசியக் கொடியேற்றப்பட உள்ளது. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிமன்ற தலைவர்களால் மட்டுமே கொடி ஏற்றப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிமன்ற தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக தொலைபேசிஎண் 1077-ல் புகார் அளிக்கலாம்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சிமன்ற தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை கண்காணிக்க பற்றாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். பஞ்சாயத்து தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக செயல்பட்டால், அவர்களின் மீது போலீஸ் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.