போதை பொருட்களின் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் பயன்பாட்டினை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மாதந்தோறும் சம்பந்தப்பட்ட துறைகள் முதன்மை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, சட்டம், ஒழுங்கு பராமரிப்பு தொடா்பாக, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் போலீசார் தனிகவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளவேண்டும்.
கடும் நடவடிக்கை
சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக, பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்து ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா, (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளா் (பொது) கண்ணகி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.