ஏற்காட்டில்புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு


ஏற்காட்டில்புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
x
சேலம்

ஏற்காடு,

ஆலோசனை கூட்டம்

புத்தாண்டை முன்னிட்டு ஏற்காட்டில் உள்ள அனைத்து வகையான தங்கும் விடுதி, லாட்ஜ் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சேலம் ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி தலைமை தாங்கி, ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏற்காட்டில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கவும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக லாட்ஜ் மற்றும் விடுதிகளில் சில கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, விடுதிகளில் தங்கும் நபர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை நன்கு விசாரணை செய்து, அந்த நபர்கள் மூலம் எழுத்து பூர்வமாக பெற வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தாலோ, அறை கேட்டு வந்தாலோ உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

முழு ஒத்துழைப்பு

விடுதி, லாட்ஜ்களில் பணிபுரியும் ஊழியர்களின் முழு விவரங்களையும் பதிவேடுகளில் முறையாக பராமரிக்க வேண்டும். பணிபுரியும் நபர்களின் புகைப்படமும் வைத்திருத்தல் வேண்டும். விடுதியில் தங்கும் நபர்கள் குறித்த விவரங்களை தினமும் போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

2 நாட்களுக்கு மேலாக அறை பூட்டியிருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அந்த அறையை தணிக்கை செய்ய வேண்டும். போலீசாரின் நடவடிக்கைகளுக்கு லாட்ஜ் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடுமையான நடவடிக்கை

புத்தாண்டில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும். சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு அதிக அளவில் வருவதால், புத்தாண்டு அன்று எந்த அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் விடுதி உரிமையாளர்கள் அறிவுரை வழங்க வேண்டும். அதனை மீறினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மது அருந்திவிட்டு பிறருக்கு தொந்தரவு செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள். புத்தாண்டை சிறப்பாக கொண்டாட அனைத்து ஆட்டோ, டாக்சி, விடுதி, லாட்ஜ் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி, காட்டேஜ் உரிமையாளர் சங்க தலைவர் சங்கர் மற்றும் லாட்ஜ், விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story