வேலை நிறுத்தம் நிறைவு: ஈரோட்டில் விசைத்தறிகள் மீண்டும் இயங்கின
வேலை நிறுத்தம் நிறைவடைந்ததை தொடா்ந்து ஈரோட்டில் விசைத்தறிகள் மீண்டும் இயங்கின.
ஈரோடு
ஈரோடு வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. ரயான் துணிக்கு உரிய விலை கிடைக்காததால் விசைத்தறிகள் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்தனர்.
அதன்படி கடந்த 8 நாட்களாக விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் ஒரு நாளுக்கு ரூ.6 கோடி வீதம் மொத்தம் ரூ.48 கோடி மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் விசைத்தறிகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கின.
Related Tags :
Next Story