உலா வரும் மயில்கள்
கூடலூர் மலையடிவாரத்தில் மயில்கள் உலா வருகின்றன.
தேனி
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதியில் கூடலூர் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள் கோவில் புலம், கல் உடைச்சான் பாறை, ஏகலூத்து ஆகிய பகுதிகளில் தட்டைபயறு, அவரை, கம்பு, சோளம் ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக உணவைத்தேடி ஏராளமான மயில்கள் மலையடிவார பகுதியில் உலா வரத்தொடங்கியுள்ளன. வானில் கார்மேகம் சூழ்ந்திருக்கும் வேளையில், தோகை விரித்து மயில்கள் ஆடுவதையும் அங்கு பார்க்க முடிகிறது. மனதை மயக்கும் மயில்களின் அணிவகுப்பை மாலை நேரத்தில் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வோர் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.
Related Tags :
Next Story