உலா வந்த ஆமை மீட்பு


உலா வந்த ஆமை மீட்பு
x

வடமதுரை ரெயில் நிலையத்தில் உலா வந்த ஆமை மீட்கப்பட்டது.

திண்டுக்கல்

வடமதுரை ரயில் நிலைய 2-வது நடைமேடை அருகே, நேற்று காக்கைகள் வட்டமடித்து கொண்டிருந்தன. இதைக்கண்டு சந்தேகம் அடைந்த ரயில்வே ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சுமார் ஒரு அடி சுற்றளவு உள்ள ஆமை ஒன்று அங்கு ஊர்ந்தபடி உலா வந்தது. இதனையடுத்து காக்கைகளிடம் இருந்து ஆமையை மீட்டு, ரயில் நிலைய சூப்பிரண்டு வீரேந்திர பாசுவானிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த வனக்காப்பாளர் கிரேசி உஷாதேவியிடம் ஆமை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த ஆமையை, அழகாபுரி அணையில் கொண்டு வனத்துறையினர் விட்டனர். இதுகுறித்து வனதுறையினர் கூறுகையில், பிடிபட்டது 2 வயதுடைய பெண் ஆமை ஆகும். இது குளத்தில் வசிக்கக்கூடியது. ரெயில்நிலையத்தின் அருகே உள்ள நீர்நிலையில் இருந்து தவறி ரெயில் நிலையத்துக்கு வந்திருக்கலாம் என்றார்.


Next Story