உலா வந்த காட்டுயானை
கொடைக்கானல் அருகே காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தது.
திண்டுக்கல்
கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், அஞ்சு வீடு, கணேசபுரம் ஆகிய பகுதிகளில் ஒற்றை காட்டுயானை சுற்றி திரிகிறது. அந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரை தாக்கியது. இந் நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் பேத்துப்பாறை கிராமத்தில் காட்டுயானை ஒன்று உலா வந்தது. இந்த யானை மாலை வரை அங்கேயே சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் உள்ளேயே தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story