தென்னை விவசாயிகள் சார்பில் கிருஷ்ணகிரியில் தேங்காய் உடைக்கும் போராட்டம்


தென்னை விவசாயிகள் சார்பில் கிருஷ்ணகிரியில் தேங்காய் உடைக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2023 1:15 AM IST (Updated: 13 July 2023 10:39 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தென்னை விவசாயிகள் சார்பில், தமிழக அரசு தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்டத்தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கும் தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மாநில அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வினியோகத்திட்டத்தின் கீழ் தேங்காய் எண்ணெயை அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காயை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story